ETV Bharat / state

காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இலங்கை முகாம் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை! - பாலியல் வன்கொடுமை

sexual abuse: ஈரோட்டில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 9:16 PM IST

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய முயன்ற இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் புவனேந்திரன். கடந்த 2021ஆம் வருடம் டிசம்பர் மாதம் அதே பகுதியில் 11ஆம் வகுப்பு படித்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டிற்கு தெரியாமல் கடத்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் போலீசார் விசாரணையில் அகதிகள் முகாமை சேர்ந்த புவனேந்திரன் மீது அடிதடி, திருட்டு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ள நிலையில், சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்யவும் முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் இளைஞர் புவனேந்திரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் சிறுமியை காதலிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த புவனேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: சீட் தராவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து விலகலா? - துரை வைகோ திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.