ETV Bharat / state

தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! - sri lanka navy Arrest TN fishermen

Sri Lanka navy Arrest TN fishermen: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 9:01 AM IST

ராமநாதபுரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு (Video Credits: ETV Bharat Tamil Nadu)

இலங்கை கடற்படையின் விரட்டியடிப்பு, கைது நடவடிக்கை, படகு பறிமுதல் மற்றும் மீன்கள் விலை வீழ்ச்சி காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் இருந்த ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, இரண்டு விசைப்படகு மற்றும் அதில் இருந்த ஒன்பது மீனவர்களை சிறை பிடித்தது. மேலும் அவர்களை விசாரணைக்காக தற்போது இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 8 விசைப்படகுகள், 4 நாட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பேனரால் பலியான உயிர்; திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - DMK BANNER DEATH CASE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.