ETV Bharat / state

அந்நியன் Vs அம்பி.. செல்வப்பெருந்தகையின் இரட்டை பேச்சு விவகாரம்.. தலைவர்கள் ரியாக்‌ஷன் என்ன? - selvaperunthagai controversy - SELVAPERUNTHAGAI CONTROVERSY

"நாம் பிறரை சார்ந்தே இருக்கப்போகிறோமா?" என காங்கிரஸ் தனித்து இயங்குவது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, "தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் எப்போதும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும்" என இரண்டு நாட்களிலயே அந்தர் பல்டி அடித்திருப்பது விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது. இந்த பிரச்சனையின் பின்னணி என்ன? மூத்த தலைவர்களின் கருத்து என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

SELVAPERUNTHAGAI,ANNA ARIVALAYAM,KV THANGABALU
SELVAPERUNTHAGAI,ANNA ARIVALAYAM,KV THANGABALU (IMAGE CREDIT - SELVAPERUNTHAGAI X PAGE, ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 6:54 PM IST

சென்னை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய இந்தியா கூட்டணி (I.N.D.I.A) மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். இந்தியா கூட்டணி தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்ததால் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணியுடன் ஆட்சியை அமைத்து இருந்தது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வென்ற நிலையில், பாஜக ஒரு இடத்தை கூட கைப்பெற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது தற்போது பேசுப் பொருளாகி வருகிறது.

செல்வப்பெருந்தகை சொன்னது என்ன?: ஜூன் 11ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "நாம் பிறரை சார்ந்தே இருக்கப்போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா?" என காங்கிரஸ் சார்பு அரசியல் குறித்து கருத்து சொல்ல தொண்டர்களிடம் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

"கூட்டணி கட்சிகளில் தோழமை என்பது வேறு, நாம் கூட்டணி கட்சிகளை சார்ந்தே இருக்கப் போகிறோமா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்" என செல்வப்பெருந்தகை அரங்கத்தில் இருந்த தொண்டர்களிடம் கேள்வி எழுப்பியது சர்ச்சைகான தொடக்கமாக அமைந்தது.

அதே கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மாநில தலைவர் செல்வப்பெருந்தை பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிக இடங்களை வெற்றிபெற முடிந்தது நாம் வெற்றி பெற காரணமே திமுகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான் என தெரிவித்திருந்தனர். அவர்கள் கூட்டத்தில் பேசும் போதே தொடண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 15) கோவையில் திமுகவின் மும்பெரும் விழா கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, "திமுக தலைவர் ஸ்டாலின் - ராகுல் இடையிலான உறவு அடுத்த தலைமுறைக்கான உறவு என்பது பெரியாருக்கும் காமராஜருக்கும் இடையில் இருந்த உறவை போன்றது" என்று பெருமித்துடன் தெரிவித்தார்.

"அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நாடாளுமன்ற தேர்தலின்போது காலையில் எந்தெந்த தொகுதியில் என்ன நிலவரம் என்பதை அக்கறையாக முதலமைச்சர் கேட்டறிவார். அதுதான் வெற்றிக்கு வழிவகுத்தது. தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் எப்போதும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும். இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அன்பை திமுக தலைவர் மீது வைத்து இருக்கின்றனர், இது வெற்றிக் கூட்டணி" என பேசியது தான் தற்போது விவதாமாக சென்றுக்கொண்டு இருக்கிறது.

செல்வாக்கை உணராமல் இருக்கிறதா காங்கிரஸ்?: இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது. திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு ராகுல் காந்தியின் செல்வாக்கும் உதவியாக இருந்துள்ளது. ஆனால் தங்களுடைய செல்வாக்கை காங்கிரஸ் கட்சியினர் உணராமல் உள்ளனர். கூட்டணியில் உள்ள திமுக தவறாக நினைக்கும் என காங்கிரஸ் மேலிடம் பேச மறுக்கிறது.

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நின்ற காங்கிரஸ் 4.32 வாக்கு சதவீதங்களை பெற்றது.
திமுக கூட்டணியுடன் 2004ம் ஆண்டு தேர்தலை சந்தித்த காங்கிரஸ் 15.67 வாக்கு சதவீதம் பெற்றிருந்தது.
ஆனால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் வாக்கு 10.6 சதவிகிதமாக குறைந்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டாலும் காங்கிரசின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான சூழல் தற்போது இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை வளர்த்தால் சட்டமன்றத்தில் கூட்டணி கட்சியிடம் அதிக சீட்டுகளை கேட்டு பெறலாம். மேலும், காங்கிரஸ் கட்சி வளர்வதை திமுக ஒரு காலமும் தடுக்கவில்லை. காங்கிரசை வளர்ப்பது அவர்களின் உரிமை, ஆனால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவதே தப்பு என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது.

இதனால் தான் எத்தனை நாள் கூட்டணி கட்சிகளை சார்ந்து இருப்பது என பேசியதையே தப்பாக நினைக்கிறது.
கூட்டணி கட்சிகளை பற்றி பேசாமல் தனியாக கூட கட்சிகளை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபடலாம்.
காங்கிரஸ் கட்சியின் மேலிடம் திமுகவுடன் நல்ல உறவில் இருக்கும் போது தனியாக தேர்தலில் நிற்பது குறித்து பேசியிருக்கக் கூடாது என மேலிடம் நினைக்கிறது. அதனால்தான் செல்வப்பெருந்தகை மாற்றி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வலுவிழக்கும் காங்கிரஸ்: செல்வப்பெருந்தகை இன்னும் அனுபவம் பெற்று இருந்தால் கட்சியை வளர்ப்பதற்காக பாதயாத்திரை செல்லலாம். உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை நடத்தலாம், ஆனால் திமுகவின் பின் செல்ல வேண்டும் என மேலிடம் நினைத்தால் அது பெரிய தவறுதான். தன் கட்சியை சுயமாக வளர்க்க வேண்டும் என எண்ணம் காங்கிரஸ் பெற்று இருக்க வேண்டும். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியை கோபப்படுத்தாமல் கூட்டணியை கட்சிகள் செயல்பட வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது.

ஆவேசமாக பேசுவது கைதட்டல் வாங்குவதாக தான் உள்ளது, செல்வப்பெருந்தகை தைரியமாக பேசியிருந்தால் மேலிடத்தில் எடுத்துச் சொல்லி தன்னுடைய கருத்தை மாறாமல் எடுத்து சொல்லி புரிய வைத்திருக்கலாம். மேலும் மேலிடம் அழுத்தம் கொடுத்தால் பதவியை கூட ராஜினாமா செய்யலாம். தற்போது இருக்கும் தலைவராக இருந்தாலும் இதற்கு முன் இருந்த தலைவராக இருந்தாலும் ஆவேசமாக பேசுவதாக மட்டும் உள்ளது. ஆனால் கட்சியை வளர்ப்பதாக தெரியவில்லை என தெரிவித்தார்.

இது வெற்றி கூட்டணி: மேலும், இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலிடம் கேட்ட போது, தாங்கள் தற்போதும் திமுக கூட்டணியில் இருப்பதாகவும் அதை தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருப்பதை மதிக்கிறோம் எனவே பொதுக்குழு கூட்டத்தில் கூட திமுக கூட்டணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் இயற்றி இருந்தோம். தொடர்ந்து இருபது ஆண்டுகளாக வெற்றி பெறும் கூட்டணியாக காங்கிரஸ் திமுக கூட்டணி இருக்கிறது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையாக இருக்கிறார். எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. மாநிலத் தலைவர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என்றார்.

இந்த விவாரம் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிடம் கேட்கும் போது, "காங்கிரஸ் மாநில தலைவர் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்களே பதிலளித்துள்ளனர், நான் அதை குறித்து பேசவேண்டியது இல்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதி ஆணவ படுகொலைகள் அதிகம்; தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் - cpim secretary about Genocide Act

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.