விழுப்புரம்: தை அமாவாசை மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மறையனூருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் பிப்ரவரி 9,10 11 ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் 510 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டப் பட்டுள்ளது.
இயக்கப்படும் பேருந்துக்கள்: கிளாம்பாக்கம் (KCBT) - 210 , காஞ்சிபுரம் -30, வேலூர் -15, விழுப்புரம் -20, புதுச்சேரி -20, திருவண்ணாமலை -20, திருக்கோவிலூர் -10, கள்ளக்குறிச்சி -5, ஆரணி/ஆற்காடு/ திருப்பத்தூர் -10
ஆகிய எண்ணிக்கையிலான பேருந்துக்கள் மேல்மறையனூருக்கு இயக்கப்படும்.
மேலும்,பிப்ரவரி 11ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான பிப்ரவரி 10 மற்றும் 11 அன்று மக்கள் கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற தளத்திற்கு சென்று இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அபுதாபியில் இந்து கோயில்; கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!