ETV Bharat / state

"ரஜினி அரசியலுக்கு வராததால் விஜயை இறக்கி விட்டிருக்கலாம்" - சபாநாயகர் அப்பாவு சூசகம்! - SPEAKER APPAVU

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால், பாஜக தான் விஜயை இறக்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Appavu talk about tvk vijay  tvk vijay  சபாநாயகர் அப்பாவு  TVK vijay maanadu
தவெக விஜய், சபாநாயகர் அப்பாவு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 4:09 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாபநாசம் அணையிலிருந்து பிசான சாகுபடிக்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு, "பாபநாசம் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 400 கோடி ரூபாயில், 3 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் தரமான அரிசி தற்போது மக்களுக்குக் கிடைக்கிறது.

சபாநாயகர் அப்பாவு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

புஸ்ஸி ஆனந்த் கிரிமினல்: தற்போது, நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் அவரும் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு எனது வாழ்த்துக்கள். புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தகவல்கள் வருகிறது. விஜயே A டீம், B டீம் இல்லை என சொல்வதை வைத்துப் பார்க்கும் போது சந்தேகம் ஏற்படுகிறது. அவர் பாஜக B டீம் என சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: "விஜய் பாஜகவின் C- டீம்.. தவெக மாநாடு மிகப் பிரமாண்டமான சினிமா சூட்டிங்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

திமுக குறித்து பணம் சம்பாதிப்பதாகச் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என விஜயின் தந்தையே சொல்லி இருக்கிறார். எனவே ஒரு கிரிமினலை எப்படி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார் என்று தெரியவில்லை. ஒருவேளை கிரிமினல் இப்போது நல்ல ஆளாக மாறிவிட்டாரா? என்னவோ.

பாஜகவின் ஏற்பாடா விஜய்?: நடிகர் விஜய் வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய போது, குற்றவாளியை போல் வருமானவரித்துறை காரில் அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது. குற்றம் இருப்பதால்தான் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். எனவே ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஏற்கனவே பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள், அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக தற்போது விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

திமுக அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 ஆயிரம் வருடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட இருக்கிறது. எனவே இந்த அரசு எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்கக் கூடிய அரசு, மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.