ETV Bharat / state

கோவை வழக்கறிஞர் படுகொலைக்கு இதுதான் காரணமா?.. எஸ்பி அதிரடி தகவல்! - Coimbatore Lawyer Murder - COIMBATORE LAWYER MURDER

Lawyer hacked to death: கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே கோவை வழக்கறிஞர் உதயகுமாரை வெட்டிப் படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் உதயகுமார், எஸ்பி பத்ரி நாராயணன்
வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் எஸ்பி பத்ரி நாராயணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 5:40 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியதில், 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் நான்கு பேரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இதில் அய்யனார் என்ற செல்வம், உதயகுமாருக்கு கடந்த பிப்ரவரியில் கடனாக ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். 6 மாதங்கள் கடந்த நிலையில், உதயகுமார் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்தும் நீங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர். அப்போது, அய்யனார் உதயகுமாருக்கு கடனாக கொடுத்த ரூ.30 லட்சம் பணத்தை அய்யனாரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, வாக்குவாதம் முற்றவே, செட்டிபாளையம் அருகே காரை நிறுத்திய அய்யனார், அவர்களது நண்பர்களான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு நபர்களை வரவழைத்து, காரில் வழக்கறிஞருடன் சென்ற அய்யனார் மற்றும் கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் ஒன்றிணைந்து வழக்கறிஞர் உதயகுமாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கார், இருசக்கர வாகனம் மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை மட்டுமே இந்த கொலைக்கான காரணம். மேலும், கோயம்புத்தூரில் கடந்த ஆண்டை ஒப்ப்பிடுகையில், இந்த ஆண்டு கொலை வழக்கு குறைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தனிக் குழுக்கள் உள்ளது. கல்லூரிகளில் மாணவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறோம். மக்கள் அச்சப்படவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

கோவையில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. நெடுஞ்சாலையில் அரங்கேறிய சம்பவம்! - Lawyer hacked to death

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.