ETV Bharat / state

கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - SOUTHERN RAILWAY

Southern Railways: திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம் ரயில்வே பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளால் அவ்வழியாக இயங்கும் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில், எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இருவழி ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Coimbatore Junction Photo
கோவை சந்திப்பு புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu (File Image))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 1:09 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம் ரயில்வே பணிமனையில் பல்வேறு பொறியியல் பணிகள் செய்யப்படுவதால் அவ்வழியாக இயக்கப்படும் இருவழி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'ரயில் எண் 16843 திருச்சிராப்பள்ளியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் டவுன் ரயில் 24.05.2024 மற்றும் 26.05.2024 ஆகிய இரண்டு நாட்கள் ஈரோடு - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். திருச்சிராப்பள்ளியில் இருந்து ஈங்கூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். 24, 26 தேதிகளில் ஈங்கூரில் இருந்து பாலக்காட்டிற்கு ரயில் இயக்கப்படாது.

அதுபோல் போதனூர், திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண் 18190 எர்ணாகுளம் - டாடா நகர் ரயில் 28, 30 ஆகிய தேதிகளில் ஒரு மணி நேரம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுபோல், கோயம்புத்தூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயில் எண் 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் 28, 30 தேதிகளில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயமுத்தூர் ரயில் நிலையம் வராது என்றும், அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும், ரயில் எண் 12678 எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 28, 30 தேதிகளில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலையத்தில் செல்போனுக்காக குழந்தை கடத்தல்.. 3 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்.. நடந்தது என்ன? - Child Kidnap Egmore Station

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.