சென்னை: 75ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னையில் தென்னக ரயில்வே சார்பில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல் துறை அணிவகுப்பை தொடங்கிவைத்த பொது மேலாளர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் குடியரசு தின விழாவில் பேசிய பொது மேலாளர் ஆர்.என்.சிங், "தென்னக ரயில்வே ஒரு சிறப்பான குறிக்கோளுடன் முன்னேறி வருகிறது. தொடர்ந்து, பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கி வருகிறது. ரயில்களை சரியான நேரத்தில் இயக்குதல், மற்றும் பயணிகளின் வசதிகள் என தொடர்ந்து, தென்னக ரயில்வே சிறப்பான சேவையை ஆற்றி வருகிறது.
குறிப்பாக, ஆத்ம நிர்பார் பாரத், மேக் இன் இந்தியா, கதி சக்தி தேசியம் போன்ற இந்தியாவின் முன்முயற்சிகள் என எல்லாவற்றையிலும் நாம் செய்து வருகிறோம். தென்னக ரயில்வே பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறது. 2023 - 2024 ஆம் ஆண்டில், தெற்கு ரயில்வே ரூ.9 ஆயித்து 482 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 5% அதிகம் ஆகும்.
2023 - 2024ல் இதுவரை 32.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளோம். மேலும், கடந்த ஆண்டை விட இந்தாண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு மிகப்பெரிய காரணம், ரயில்களை சரியான நேரத்தில் இயக்கிதே என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எழும்பூர், காட்பாடி என 13 ரயில் நிலையங்களில், பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. புதுச்சேரி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் ஜே.என்., எர்ணாகுளம் டவுன், கொல்லம், கோழிக்கோடு மற்றும் வர்கலா சிவகிரி நிலையங்கள் நவீன வசதிகளுடன் உலகத் தரத்தில் முக்கியமான நிலையங்களை மறுவடிவமைப்பு செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு ரயில்வேயில் உள்ள 93 நிலையங்களில் மற்றும் முதல் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் டவுன் முதல் கன்னியாகுமரி வரை, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் ஜேஎன், திருநெல்வேலி - மேலப்பாளையம் ஆகிய வழித்தடங்கள் பிப்ரவரி 2024க்குள் கட்டி முடிக்கப்பட்டு, ஜோகட்டே – தோக்கூர் இரட்டிப்பாக்கப்படும். மேலும், இந்த ஆண்டு இதுவரை தெற்கு ரயில்வே, ஆர்ஆர்பி, ஆர்ஆர்சி மூலமாக 10 ஆயிரத்து 310 புதிய ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.