சென்னை: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஷாலிமார் வரை செல்லும் திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும்.
மேலும் மறு மார்க்கத்தில் ஷாலிமார்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரிலிருந்து ஆகஸ்ட் 17, 24, 31, செப்டம்பர் 7 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 01.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் 12 குறைந்த கட்டண குளிர்சாதன, மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள், 1 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டி இணைக்கப்படும்.
இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா,சிமாச்சலம் வடக்கு, பென்டுர்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீ கா குளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், ஜஸ்பூர் கியான்ஸ்ஹர், பட்ரக், பாலேஸ்வர், கரக்பூர், சந்தர காச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வலிப்பு ஏற்பட்ட நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்.. சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு! -