சென்னை: பக்ரீத் பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை இன்று(வெள்ளி) நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 10.20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் எண்(06053) செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழிகாக நாளை காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் மற்றொரு அணி.. எடப்பாடிக்கு அழுத்தம்? - தலைவர்கள் கூறுவது என்ன?
மறுமார்க்கத்தில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் என்(06054) நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி பெட்டிகள் - 9, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 11 மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் இரண்டு என மொத்த 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து இன்று இரவு மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வேகமாக இந்த ரயில்களின் முன்பதிவு செய்து வருகின்றனர் எனவும் தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்ப்புதல்வன் திட்டம்; ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி, வெங்காயம் விலை.. ஒரு கிலோ இவ்வளவா?