ETV Bharat / state

தொலைதூர ரயில்களில் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள்; தெற்கு ரயில்வே அசத்தல் அப்டேட்! - Southern Railway - SOUTHERN RAILWAY

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ரயில்களில் படுக்கை வசதி பெட்டியை குறைத்து முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - southern railway X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 9:26 PM IST

மதுரை : ரயில்களில் படுக்கை வசதி பெட்டியை குறைத்து கூடுதலாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில், "திடீர் ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வார்கள். 2 அல்லது 3 முன்பதிவில்லாத பெட்டியுடன் பயணிக்கும் தொலைதூர ரயில்களில் கூட்ட நெரிசலில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் முதல் 2 அல்லது 3 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் உள்ள ரயில்களில் கூடுதலாக 1 அல்லது 2 பெட்டிகளுடன் மொத்தம் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அமிர்தா விரைவு ரயில் : திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயிலில் (16343) ஜனவரி 20 முதல் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டு மொத்தம் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஜனவரி 21 முதல் 4 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும்.

இதையும் படிங்க : பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா?.. இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.. ரயில் முன்பதிவு தொடங்கப்போகுது! - Pongal Train Ticket Booking

புருலியா விரைவு ரயில்: திருநெல்வேலி - மேற்குவங்க புருலியா விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ஜனவரி இறுதி வாரம் முதல் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும்.

தொலைதூர ரயில்கள் : பாலக்காடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு, புதுச்சேரி - கன்னியாகுமரி - புதுச்சேரி, விழுப்புரம் - கரக்பூர் - விழுப்புரம், புதுச்சேரி - மங்களூர் - புதுச்சேரி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம், திருவனந்தபுரம் வடக்கு - நீலாம்பூர் - திருவனந்தபுரம் வடக்கு, மைசூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் காவிரி விரைவு ரயில், ஆலப்புழா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா ஆகிய ரயில்களில் ஜனவரி இறுதி வாரம் முதல் சில இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும்.

அதேபோல், திருவனந்தபுரம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், ஹைதராபாத் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத், ஈரோடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஆகிய ரயில்களிலும் ஜனவரி இறுதி வாரம் முதல் சில இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.