ETV Bharat / state

ஏழை மாணவர்களுக்கு உதவிய பாசஞ்சர் ரயில் சேவை ரத்து- தெற்கு ரயில்வே கூறும் காரணம் என்ன? - Southern Railway - SOUTHERN RAILWAY

Tuticorin - Tirunelveli Passenger Train Service Cancelled: தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் சேவையை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 11:15 AM IST

தூத்துக்குடி: சுதந்திர தினத்தில் இருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்தி, நெல்லை தூத்துக்குடி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, காலை 7.35 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பும் இந்த பயணிகள் ரயிலானது தாழையுத்து, கங்கைகொண்டான், நாரைக்கிணறு, வாஞ்சி மணியாச்சி, கைலாசபுரம் தட்டப்பாறை வழியாக காலை 9.20 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

பாசஞ்சர் ரயில் ரத்து: தினசரி இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் சேவையானது நெல்லை மற்றும் தூத்துக்குடி ஏழை எளிய மக்கள், மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. தற்போது இந்த ரயில் சேவையை நாளை (ஆக.19) முதல் ரத்து செய்யப்போவதாக தென்னக ரயில்வே தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி செல்லும் வண்டி எண் 06668 மற்றும் 06667 பயணிகள் ரயிலுக்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தால், நாளை முதல் (ஆக.19) ரத்து செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவு ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், திடீரென ஒரு ரயில் சேவையை நிறுத்துவதால் அதனை நம்பியுள்ள மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயணிகள் ரயில் ரத்துக்கு காரணம்?: தூத்துக்குடி - நெல்லை இடையேயான தொலை வெறும் 62 கிமீ என்றாலும், இரு நகரங்களுக்கும் இடையே மக்கள் பலவேறு காரணங்களுக்காக அதிகளவில் பயணிக்கின்றனர். தற்போது, தூத்துக்குடி - நெல்லை இடையே போதிய போக்குவரத்து வசதி இல்லை என்ற காரணத்தால், ஆகஸ்ட் 15ஆம் தேதி பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 4.05 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லைக்கு அதிகாலை 4.40 மணிக்கும், தூத்துக்குடிக்கு 6.40 மணிக்கும் சென்றடையும். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த சேவை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. இப்படி பயணிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த ரயில்வே நிர்வாகம், பயணிகள் ரயிலை ரத்து செய்து பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. தற்போது பாலருவி எக்ஸ்பிரஸ் நீட்டிப்பை கொடுத்துவிட்டு, பாசஞ்சர் ரயிலை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கேரள மாநிலத்தின் பாலக்காட்டிலிருந்து புனலூர் வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் பயணிகளின் கோரிக்கையை அடுத்து செங்கோட்டை வரையும், பின்னர் திருநெல்வேலி வரையும் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரயில் வழித்தடத்தில் இரும்பு ராடை வைத்துச் சென்ற மர்ம நபர்கள்.. ராணிப்பேட்டை அருகே பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.