ETV Bharat / state

செப்டம்பரில் ரத்தாகும் ரயில்கள்.. சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி பயணிகள் கவனத்திற்கு..! - southern railway

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 3:24 PM IST

Southern Railway Train cancellation: சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சிறப்பு ரயில் மற்றும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் மாதத்தில் ரத்து செய்யப்படும் தேதிகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ரயில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த வாரம் மீண்டும் சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், அரக்கோணம் ரயில்வே யார்டு பகுதியில் பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங்கை மாற்றி அமைக்கும் பொறியியல் பணிகள் நடந்து வருகிறது.

இதன் காரணமாக, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 1ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதே செப்டம்பர் 1ஆம் தேதி வரை, கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680) காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.

காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே இந்த ரயில் இயங்காது எனவும், அதேபோல செப்டம்பர் 1ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல, சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06044) ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 5 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வு.. வானுயர வைத்த புதுக்கோட்டை வயலோகம் அரசுப் பள்ளி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.