ETV Bharat / state

மைசூர் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்! எப்பத்துல இருந்து தெரியுமா? - Mysore to Karaikudi special train - MYSORE TO KARAIKUDI SPECIAL TRAIN

Mysore to Karaikudi special train: பயணிகளின் வசதி கருதி வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மைசூர் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில் ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில் கோப்பு படம்
ரயில் கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 8:54 AM IST

மதுரை: ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆகஸ்ட் 14, 17 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பயணிகளின் வசதிக்காக மைசூர் - காரைக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06295) மைசூரில் இருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் காரைக்குடி - மைசூர் சிறப்பு ரயில் (06296) காரைக்குடியில் இருந்து ஆகஸ்ட் 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.10 மணிக்கு மைசூர் சென்று சேரும். இச்சிறப்பு ரயில்கள் மாண்டியா, மாடூர், ராம நகரம், கெங்கேரி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 11 காலை 08.00 மணிக்கு துவங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவை - அபுதாபி விமான சேவை.. இண்டிகோ விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு! - Kovai To Abu Dhabi Flight Service

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.