ETV Bharat / state

ஜில் ப்ரோ.. 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - TAMIL NADU WEATHER UPDATE

TAMIL NADU WEATHER UPDATE: ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:05 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் 1 செ.மீ முதல் 4 செ.மீ வரை மழைப பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் தமிழ்நாட்டின் இதர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 41.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று ( 30-05-2024) துவங்கியது.

மேலும் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதே போல் ஜூன் 3 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இயல்பை விட 1-3° செல்சியஸ் அதிகமாகவும், தமிழ்நாட்டின் இதர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிகப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 2,3 ஆகிய நாள்களில் எச்சரிக்கை ஏதுமில்லை என குறிப்பிடபட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று மற்றும் நாளையும் தென் வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 1 ஆம் தேதி தென் வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் தென் வங்கக்கடல், அந்தமான் கடல், மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 30.05.2024: லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31.05.2024 மற்றும் 01.06.2024 : லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02.06.2024 மற்றும் 03.06.2024 : எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெதர் மேன் பிரதீப் பதிவு : 48°C வெப்பநிலையுடன் 25% ஈரப்பதத்துடன் இருக்கும் டெல்லியை விட தென் சென்னை ஈசிஆர் பகுதியில் பதிவாகும் 38°C வெப்பநிலையுடன் 69 % ஈரப்பதத்துடன் இருக்கும் சென்னை அபாயகரமானது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: புதுச்சேரி கோட்டையில் வெற்றிக்கொடி ஏற்றுமா காங்கிரஸ்? கோட்டையை தகர்க்குமா பாஜக?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.