ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங்கின் துப்பாக்கி எங்கே இருந்தது? - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் - Armstrong murder

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இடம் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி உள்ள போதிலும் அது வீட்டிற்கு வெளியே இருக்கும் போது அதனை அவர் உடன் வைத்திருப்பதில்லை என்பதை அறிந்து தான் கொலையாளிகள் அவரை படுகொலை செய்ததாக ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 1:39 PM IST

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு தங்களது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்பாடி பகுதியைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த போலீசாரின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு (ஜூலை 5) சென்னை பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் அருகே வைத்து அவரை உணவு டெலிவரிமேன் போல் உடையணிந்து வந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

திட்டமிட்டு கொலை? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், அரசியலிலும், பொது சேவையிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பல பகுதிகளில் இவருக்கு பல்வேறு எதிரிகளும் உண்டு என்றும் இதனாலே அவர், எப்போது வெளியில் சென்றாலும் கைத் துப்பாக்கி ஒன்றை கொண்டு செல்வது வழக்கம். இதற்கான உரிமம் அவர் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வெளியிடங்களுக்கு செல்லும் போது துப்பாக்கியை உடன் வைத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங், வீட்டிற்கு அருகே இருக்கும் இடுப்பில் துப்பாக்கியை வைத்துக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.ஆனாலும் இவரைச் சுற்றி எப்போதும் ஆதரவாளர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் செல்லும் இடம், நேரம், ஆதரவாளர்கள் எப்போது இருப்பார்கள், எப்போதும் தனியாக இருப்பார் என்பதை கண்காணித்து வந்தது. மேலும், அவருடைய துப்பாக்கியை வீட்டிற்கு அருகே இருக்கும் போது உடன் வைத்திருப்பதில்லை என்பதை அந்த கும்பல் தெரிந்து வைத்திருந்தது.

இதனை அறிந்த கும்பல் வீட்டிற்கு வெளியே நேற்று இரவு திட்டமிட்டு அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக காவல்துறையிடம் ஒப்படைத்த துப்பாக்கியை முறைப்படி தேர்தல் நடத்தை முடிந்த பின்னர் கடந்த ஜூன் 13-ஆம் தேதி துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் திரும்பப் பெற்றதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.