ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் விடுதலையாவதில் சிக்கல்? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன? - Senthil Balaji Case - SENTHIL BALAJI CASE

Senthil Balaji Case: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் விடுதலையாவதில் உள்ள சிக்கல்கள் என்ன? என்பது விரிவாக பார்க்கலாம்.

செந்தில் பாலாஜி வழக்கு
செந்தில் பாலாஜி வழக்கு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 10:16 AM IST

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தாலும், விடுதலையாவதில் சில சிக்கல் உள்ளது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, கடந்த 2011 - 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகியோர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கை முடித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சமரசம் என்பது பணம் கொடுக்கல் வாங்கல் நடந்திருப்பதை உறுதி செய்கிறது. தவறு செய்யாத யாரும் யாருடனும் சமரசம் செய்ய அவசியம் இல்லை. அதனால், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக உறுதி செய்து, 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி, சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும், மருத்துவ காரணங்களுக்காகவும் ஜாமீன் வழங்க முடியாது என மறுத்து விட்டது.

பின்னர், மீண்டும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கின் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது. மேலும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை 3 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், அமலாக்கத்துறை ஆவணங்களை தனக்கு வழங்கும் வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும்.

தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தால், தற்போது அமர்வு நீதிமன்றம் நடத்தும் விசாரணை தேவையற்றது. அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சுமார் 18 வழக்குகள் செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்டது ஆனால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கேட்டும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் ஒருவேளை உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியதாக எம்.பி, எம்.எல். ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையாக முடியாது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக தொடரப்பட்ட வழக்கில், பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்காக மட்டும் அமலாக்கத்துறை விசாரணை செய்வதால், ஜூன் 14, 2023 முதல் கிட்டத்தட்ட 420 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி வெளியே வர முடியாது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொல்கத்தா சம்பவம் எதிரொலி; மருத்துவமனைகளில் பாதுகாப்புத் தணிக்கை நடத்த அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.