ETV Bharat / state

சின்னத்திரை துணை நடிகைக்கு பாலியல் வன்கொடுமை.. நடிகரின் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் கைது! - sexual assault - SEXUAL ASSAULT

Sexual assault: சின்னத்திரை துணை நடிகை ஒருவரை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது சம்பந்தமாக 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னத்திரை துணை நடிகைக்கு பாலியல் வன்கொடுமை
சின்னத்திரை துணை நடிகைக்கு பாலியல் வன்கொடுமை (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 7:27 PM IST

சென்னை: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயது பெண் சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி சினிமாத் துறையில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

இந்த நிலையில், அவரது உறவினர் வேலை விஷயமாக ஹைதராபாத் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தான் தனியாக வீட்டில் இருக்கையில், 6 பேர் கொண்ட மர்ம கும்பலில் முருகேசன் என்பவர் வீட்டின் வெளியில் இரண்டு பேரை காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, தன்னை வலுக்கட்டாயமான பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் சிக்கியவர்களில் திரைப்பட நடிகர் ஒருவரின் கார் ஓட்டுநர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை - புனலூர் ரயில் பெட்டியில் சமையல் அடுப்பு, அடுப்புக்கரி பறிமுதல்; தனியார் சுற்றுலா மேலாளர் கைது! - Madurai To Punalur Train

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.