ETV Bharat / state

சிவகாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை.. 6 பேர் கைதானதன் பின்னணி என்ன? - Family Suicide in Sivakasi - FAMILY SUICIDE IN SIVAKASI

Sivakasi family suicide: சிவகாசி அருகே கடன் தொல்லையால் மகன், மகள், பேத்தியை கொலை செய்து ஆசிரிய தம்பதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வட்டிக்கு பணம் கொடுத்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tiruthangal
திருத்தங்கல் காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 10:03 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆனந்தவள்ளி (27) என்ற மகளும், ஆதித்யா (14) என்ற மகனும் இருந்தனர்.

இதில் ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி மூன்று மாத குழந்தை இருந்தது. ஆதித்யா, சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடன் பிரச்னை காரணமாக கடந்த மே 22ஆம் தேதி இரவு ஆதித்யா, ஆனந்தவள்ளி, அவரது மூன்று மாத குழந்தை ஆகியோரை கொலை செய்துவிட்டு, லிங்கம் மற்றும் பழனியம்மாள் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் அளித்த மிரட்டலால் தான் தற்கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, லிங்கத்திற்கு கடன் கொடுத்தவர்களில் ஆறு பேரை திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, டி.எஸ்.பி சுப்பையா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்குமார் (43), திருத்தங்கலைச் சேர்ந்த கிருஷ்ணன் (42), கொங்கலாபுரத்தைச் சேர்ந்த வி.முருகன் (69), எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.முருகன் (53), மணிவண்ணன் (43) மற்றும் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (44) ஆகிய ஆறு பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கந்துவட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'எங்களை வாழ விட மாட்டாங்க'.. திருமணத்தை தாண்டிய உறவால் ஜோடி தற்கொலை.. பகீர் பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.