ETV Bharat / state

சென்னை டிராபிக் போலீசிடம் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்... விசாரணையில் அடுத்தடுத்து 6 பேர் கைது..!

ஆலந்தூரில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா விற்றவர்கள் மூலம் ஆறு பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 1:23 PM IST

சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே நேற்று மாலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிண்டியில் இருந்து ஆலந்தூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். அதில் வந்த இருவர் வாகனத்தை நிறுத்தாமல் போலீசாரை பார்த்தவுடன் வாகனத்தை திருப்பி வேகமாக செல்ல முயற்சி செய்தனர். இதைக் கண்ட போக்குவரத்து போலீசார் சுதாரித்துக் கொண்டு அந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

அதில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்யும்போது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணையில் இருவரும் மதுரை சேர்ந்த கருப்பு (28) மற்றும் ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த வீரமணி (27) என்று தெரிய வந்தது. இதில் கருப்பு என்பவர் மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் உள்ள பல இடங்களில் பிளாட்பார்மில் தங்கி விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தாக்குதலுக்கு உள்ளான கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் கூற சென்ற மாவட்ட செயலாளர் மீது வழக்கு... பாமக நிறுவனர் ராமதஸ் கண்டனம்!

மேலும், ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த வீரமணிக்கு ஜெயிலில் கருப்பின் நட்பு கிடைத்ததால் இருவரும் சேர்ந்து சென்னையில் உள்ள பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கணேசன், கணேஷ்குமார், சிவக்குமார், தினேஷ் என்கிற நான்கு பேரும் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர், வேளச்சேரி, ஆலந்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு கஞ்சா விற்பனையாளர்களாக செயல்பட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து இவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா, ஆறு செல்போன், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.