ETV Bharat / state

"விஜய் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக தெரிகிறார்" - முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி! - KT RAJENDRA BALAJI

தவெக தலைவர் விஜய் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக தெரிவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 5:29 PM IST

சிவகாசி: திருத்தங்கல்லில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

கொடை வள்ளல் என போற்றப்பட்ட எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட அதிமுக மக்களுக்கு கொடுக்கின்ற கட்சியாக இருக்கின்றது. கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முறை தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவர் என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக ஆட்சியின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளன.

தைப்பொங்கல் கொண்டாட மக்கள் யாரையும் நம்பி இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் ரூ.2,500 ரொக்கத்துடன், பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. அப்போது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறிய ஸ்டாலின், தற்போது ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அதிமுக ஆட்சி அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி, திமுக ஆட்சி அவர்களின் குடும்பத்திற்கான ஆட்சி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறுவது ஏமாற்று வேலை. தமிழ்நாட்டில் உள்ள எந்த தரப்பு மக்களையும் பாதிக்காத வகையில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளே அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றன. கூட்டணிக்குள்ளேயே திமுகவுக்கு எதிரான அரசியல் இருக்கிறது.

திமுகவின் அடக்குமுறை மற்றும் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார். விஜய்யின் நிதானத்தை பார்க்கின்ற போது, பக்குவப்பட்ட அரசியல்வாதியாக தெரிகிறார். புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உள்ளிட்டோரும் திமுகவை விமர்சிப்பது அதிமுகவுக்கு பலம் தான்.

2010 இல் நடந்த பொன்னகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த அதிமுக, 2011ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போதும் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன என்ற கருத்து நிலவியது. 2011ல் நடந்த வரலாறு 2026-ல் திரும்பும், இவ்வாறு அவர் கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.