ETV Bharat / state

திருப்பத்தூரில் மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவர் தலைமறைவு! - Tirupattur

Tirupathur doctor issue: தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றும் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மருத்துவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:58 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில், 23 வயதான இளம்பெண் ஒருவர் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அப்பெண்ணிற்கு மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அது மட்டுமல்லாமல், நேற்று முன்தினம் (பிப்.21) அவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மருத்துவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை - சென்னை மகிளா நிதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.