சென்னை: இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பயில அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் உள்ள 571 நகரங்களில் கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் தேர்வெழுதினர். தற்போது நீட் தேர்வுக்காக தேர்தல் முடிவுகளை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை exams.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில் 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
8 தமிழ்நாடு மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுத்து சாதனை: குறிப்பாக, தமிழ் மொழியில் 36 ஆயிரத்து 333 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி பெற்ற முதல் 100 இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களில் 99.997129% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டு மாணவர்கள் 8 பேர் சாதனை படைத்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேத்சுனில் குமார் சின்டே (Ved Sunilkumar Shende) என்ற மாணவன், தமிழ்நாட்டைச் சார்ந்த சையத் ஆஃபரின் யூசப் (Syed Aarifin Yusuf ) உட்பட 67 மாணவர்கள் (முழு மதிப்பெண்) ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 99.997129 மதிப்பெண் எடுத்த 8 மாணவர்கள் குறித்த விபரம்:
- எம். சையது ஆரிபின் யூசுப் (99.997129 மதிப்பெண்கள்)
- எஸ்.சைலஜா (99.997129 மதிப்பெண்கள்)
- ஆதித்ய குமார் பண்டா (99.997129 மதிப்பெண்கள்)
- பி.ஸ்ரீராம் (99.997129 மதிப்பெண்கள்)
- பி. ராஜநீஷ் (99.997129 மதிப்பெண்கள்)
- எம்.ஜெயதி பூர்வஜா (99.997129 மதிப்பெண்கள்)
- ஆர்.ரோகித் (99.997129 மதிப்பெண்கள்)
- எஸ்.சபரீசன் (99.997129 மதிப்பெண்கள்)
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த உங்கள் பார்வை என்ன? - வாணி போஜனின் பதில் இதுவா? - Vani Bhojan