ETV Bharat / state

காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ! - SAMSUNG STAFF MINI VAN ACCIDENT

சாம்சங் ஊழியர்கள் லிப்ட் கேட்டு பயணித்த வாகனம் காஞ்சிபுரம் அருகே கவிழ்ந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான வாகனம்
விபத்துக்குள்ளான வாகனம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 11:06 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொழிற்சங்கம் அங்கீகாரம், ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்ற பல்வேறு வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 7 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி. வி.கணேசன் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

மினி வேன் கவிழ்ந்த காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

மினி வேன் விபத்து: இந்தநிலையில், இன்றும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாம்சங் ஊழியர்கள் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது சுங்குவார்சத்திரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த மினி லோடு வாகனத்தில், தொழிலாளர்கள் லிப்ட்டு கேட்டு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சரியாக வாலாஜாபாத் நோக்கி வந்த மினிவேன் ஆனது சிறுமாங்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் மீது குற்றச்சாட்டு: போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரியும் சாம்சங் ஊழியர்களை,சுங்குவார்சத்திரம் மேம்பாலம் அருகே போலீசார் வாகன சேதனை செய்வதாகும், அவர்களின் அடையாள அட்டையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, போராட்ட பந்தலுக்கு அனுமதித்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

போலீசாரின் இந்த கெடுபிடியால் தொழிலாளர்கள் பலரும் போராட்ட பந்தலுக்கு வர தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் மீது தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.