ETV Bharat / state

தென்காசியில் தனியார் பேருந்து - லாரி மோதல்; மூன்று பேர் உயிரிழப்பு! - Tenkasi Bus Accident - TENKASI BUS ACCIDENT

Tenkasi Bus Accident: தென்காசியில் தனியார் பேருந்து மீது கனிமவள லாரி மோதிய கோர விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுவன் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்து (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 4:28 PM IST

தென்காசி: தென்காசியில் தனியார் பேருந்து மீது கனிமவள லாரி மோதிய கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் இருந்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான கனிம வள லாரிகள் சென்று வருகிறது. இதில், செங்கோட்டை பகுதியில் இருந்து சுரண்டை பகுதிக்கு கனிம வளம் ஏற்றிச் செல்வதற்காக வந்த டிப்பர் லாரி தென்காசி - மதுரை நெடுஞ்சாலையான ஈனா விளக்கு பகுதியில் வந்துள்ளது.

அதேநேரம், ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஈனா விலக்கு ரவுண்டானா பகுதியைக் கடந்து செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனிமவள லாரி, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கவிழ்ந்து கிடந்த பேருந்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த கோர விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனிமவள லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், லாரியைக் கைப்பற்றிய தென்காசி காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து! - ARIYALUR LORRY ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.