ETV Bharat / state

சீர்காழியில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் அதிரடி பணியிட மாற்றம்.. காரணம் என்ன? - sirkazhi police transfer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 10:43 AM IST

sirkazhi police transfer: சீர்காழியில் பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

சீர்காழி காவல் நிலையம்
சீர்காழி காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன்(40). இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். அதே தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரவி (60). இவரது கடைக்கு பொருள் வாங்கச் சென்ற மதன் மற்றும் அவரது நண்பர் பாட்ஷா ஆகியோர் ரவியிடம் பொருட்கள் வாங்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் மதன், பாட்ஷா இருவரும் ரவியை தாக்கியதாகவும் அப்போது அங்கு வந்த ரவியின் ஆதரவாளர்கள் பாட்ஷாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சீர்காழி போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தாததாக கூறப்படும் நிலையில், கடந்த 27ஆம் தேதி சீர்காழியில் டீக்கடையில் மதன் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த முகக்கவசம் அணிந்த மர்ம நபர்கள் மதனை அடித்து, கால், உடல் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டி, இரும்பு கம்பியால் தாக்கி தப்பி சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனிடையில் மதனின் சகோதரர் உறவினரான மணிகண்டன்(33) என்பவர் சீர்காழி உப்பனாற்று இடது கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் ஆற்றில் குதித்ததால் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து காயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடையில் பொருட்கள் வாங்கும் போது ஏற்பட்ட தகராறின் முன் விரோதம் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா(எ) பூரணச்சந்திரன்( 29), சீர்காழி கச்சேரி ரோட்டை சேர்ந்த விக்னேஷ்(24), சீர்காழி பிடாரி கீழ வீதியைச் சேர்ந்த வினோத்குமார்(37), ராதாநல்லூர் பெரிய தெருவைச் சேர்ந்த குற்றாலீசுவரன்(24) ஆகிய 4 பேரை கடந்த 29ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வந்த நிலையில், சீர்காழி அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (33), ஈசானியத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (34) ஆகிய இரண்டு பேரையும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர்கள் மதனை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பட்டப் பகலில் முன்று பேர் வெட்டப்பட்ட வழக்கில், பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமாரை மயிலாடுதுறை ஆயுதப்படைக்கும், சீர்காழி உதவிக்காவல் ஆய்வாளர் அசோக் குமாரை குத்தாலம் காவல் நிலையத்திற்கும், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசனை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், காவலர் அகஸ்டின், தலைமை காவலர் குலோத்துங்கன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சதீஷ் குமார், ராஜாஜி ஆகியோர் மணல்மேடு காவல் நிலையத்திற்கும் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். சீர்காழி காவல் நிலையத்தில் 7 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்ட சம்பவம் காவலர்கள் இடையே அச்சத்தையும், பொதுமக்கள் இடையே பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரி - விவசாயிகள் இடையே வாக்குவாதம்! - Mayiladuthurai COTTON AUCTION

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.