சென்னை: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 2021 செப்டம்பர் 18 அன்று தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, 2024 ஜூலை 31 அன்று அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததுள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், பதவிக்காலம் முடிவடைந்த காலத்திற்கு பிறகு நீங்கள் எந்த தகுதியின் கீழ் ஆளுநர் பதவியில் தொடர்கிறீர்கள்? பதவிக்காலம் முடிந்த பிறகும் நீங்கள் ஆளுநர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் இல்லையா? என்று தமது கடிதத்தில் எஸ்.துரைசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:மீண்டும் தமிழக ஆளுநராகிறாரா ஆர்.என்.ரவி? மத்திய அரசுக்கு RTI மூலம் கேள்வி! - Next TN Governor