ETV Bharat / state

செங்கோட்டையனா? அப்படினா யார்னு தெரியலையே.. திமுக எம்.பி ராசா கிண்டல்! - நீலகிரி நாடாளுமன்ற தொகுதி

MP A Raja: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பீர்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார் என எம்.பி ஆ. ராசாவிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு, செங்கோட்டையனா? அப்படினா யார்னு தெரியலையே எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.

Erode
Erode
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 10:23 PM IST

செங்கோட்டையனா? அப்படினா யார்னு தெரியலயே.. எம்.பி ராசா கிண்டல்!

ஈரோடு: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பவானிசாகர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நீலகிரி எம்.பி ஆ. ராசா அடிக்கல் நாட்டினார். அதேபோல் முடிவு பெற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ. ராசா போட்டியிட்டால் நிச்சம் டெபாசிட்டை இழப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.பி ஆ. ராசா, "செங்கோட்டையனா? அப்படினா யார்னு தெரியலையே" எனச் செய்தியாளர்களிடமும், அருகே இருந்த கட்சிக்காரர்களிடமும் அவரை குறித்துக் கேட்டுக் கிண்டலாகக் கேள்விக்குப் பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்துவோம். அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம். திமுக-வின் நல்லாட்சிக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்போம். இது தான் திமுகவின் பிரச்சார வியூகம். நாடாளுமன்றத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியைத் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு ஏன் வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினேன்.

மத்திய அரசின் பேரிடர் நிதி மற்றும் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட பேரிடர் நிதி என இரண்டு விதமான நிதிகள் உள்ளது. இதில் தானாகவே மத்திய அரசு அந்தந்த மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியை ஒதுக்கி இருக்கும். அந்த நிதி மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் கேட்பது மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்கள் அந்த நிதிதான் இந்த நிதி எனக் கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி போல் பேசுகிறார்கள். அதிக வெயில் காரணமாகப் பாரதிய ஜனதா கட்சியினருக்குச் சற்று மண்டை குழம்பி விட்டது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், இதற்கு முன்னால் ஆண்ட கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேசியப் பேரிடர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை மட்டும் ஏன் வஞ்சிக்கிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும்.. வழக்கின் பின்னணியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.