ETV Bharat / state

நெல்லை, மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது? - செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் - Selvaperunthagai - SELVAPERUNTHAGAI

Selvaperunthagai: திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை தகவல்
திருநெல்வேலி, மயிலாடுதுறை வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 1:30 PM IST

செல்வப்பெருந்தகை

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தற்போது வரை திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவிக்காமல் இருந்து வருகிறது.

இதனால், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, இன்று காலைக்குள் வேட்பாளர் அறிவிக்காவிட்டால், திமுக சார்பில் திருநெல்வேலியில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏ மற்றும் பி படிவத்தை வழங்கியுள்ளார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பாஜக அரசால் எங்களது கட்சி நிதியிலிருந்து ரூ.285 கோடி திருடப்பட்டிருக்கிறது. மோடி காங்கிரஸையும், ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளையும் ஒழிக்க முயற்சிக்கிறார். நிதி ஆதாரத்தை முடக்கினால், காங்கிரஸ் கட்சியை முடக்கிவிடலாம் என மோடி பகல் கனவு காண்கிறார். மக்களுக்கான கட்சி காங்கிரஸ். அதை அவ்வளவு எளிதில் முடக்கிவிட முடியாது.

பாஜகவை போன்று காங்கிரஸில் ஆளைப்பார்த்து சீட் கொடுப்பது கிடையாது. ஒவ்வொருவரையும் மணிக்களை கோர்ப்பது போன்று அறிவித்து இருக்கிறார்கள். எனவே, சற்று தாமதம் ஏற்படுகிறது. திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருவார். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்தார். இந்நிலையில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலி நாங்குநேரியில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேட்பாளரே இல்லாத நெல்லையில் திமுக தலைவரின் பொதுக்கூட்டம்.. நெல்லை தொகுதி திமுக வசம் செல்கிறதா? நொடிக்கு நொடி பரபரப்பு! - M K Stalin Campaign In Tirunelveli

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.