ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட்டில் இனி நோ வெயிட்டிங்.. புதிய வசதி அறிமுகம்! - Self Baggage Drop Method

Self Baggage Drop Method: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் உடமைகளை, பாதுகாப்பு சோதனைகள் நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு, நீண்ட நேரம் காத்திருக்காமல், தானியங்கி இயந்திரங்கள் மூலம், வெகு சீக்கிரத்தில், விமானங்களில் ஏற்றுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 12:09 PM IST

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் முனையம் ஒன்றிலிருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ், விமான பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் டிராப் எனப்படும், Self Baggage Drop (SBD) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.

செல்ப் பேக்கேஜ் ட்ராப் முறை: இதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை, தானியங்கி இயந்திரங்கள் மூலம், தாங்களே ஸ்கேன் செய்து பரிசோதித்து, கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி முனையம் ஒன்றில், பாதுகாப்பு சோதனை கவுண்டர்கள் 60-லிருந்து 63 வரையில், தானியங்கி சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டர்களில், ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டும் இருக்கும்.

Self Baggage Drop Method:
Self Baggage Drop Method:

எப்படி பயன்படுத்துவது?: பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு, தங்களின் பயண டிக்கெட், பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக தானியங்கி முறையில், அவர்களுக்கு போர்டிங் பாஸ் வரும். அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனடியாக அந்த உடைமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், அந்த இயந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும்.

அதைப் பார்த்துவிட்டு, பயணி அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் மூலம் ஓகே கொடுக்க வேண்டும். அதோடு தான் எடுத்துச் செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். இதை அடுத்து பயணிகள் உடைமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், இயந்திரத்தில் இருந்து வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, உடமைகளை அருகே உள்ள கன்வேயர் பெல்டில் வைத்துவிட்டால், பயணியின் உடைமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே கொண்டு செல்லப்படும்.

காத்திருப்பு நேரம் குறையும்: இந்த புதிய முறை மூலம், பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவது மற்றும் தங்கள் உடமைகளை பாதுகாப்பு சோதனை நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைப்பது போன்றவைகளுக்காக, நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவாக அப்பணிகளை முடித்துவிட்டு, பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம். இதனால் இந்த புதிய திட்டத்திற்கு பாஸ்ட் டிராப், எஸ்.பி.டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்முறையாக: இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்போது முதல் கட்டமாக, சென்னை உள்நாட்டு விமான நிலைய, முனையம் ஒன்றில் இருந்து புறப்படக்கூடிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு மட்டும் இந்த புதிய, செல்ப் பேக்கேஜ் டிராப் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

படிப்படியாக மற்ற விமான நிறுவன பயணிகளுக்கும், அதோடு உள்நாட்டு முனையம் நான்கில் இருந்து புறப்படும் விமான பயணிகளுக்கும், இந்த முறை செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக இந்த அதிநவீன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களைப் பதவி இறக்கம் செய்தது சட்டவிரோதமானது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Annamalai University

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.