ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் பொம்மையில் கடத்தி வரப்பட்ட 273 கிராம் தங்கம் பறிமுதல்!

Trichy Airport: திருச்சி விமான நிலையத்திற்கு, காபி மேட் பவுடர் மற்றும் பொம்மைகளில் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொம்மையில் மறைத்து கடத்தி வரப்பட்ட 273 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 9:30 AM IST

Updated : Feb 11, 2024, 3:14 PM IST

திருச்சி: துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில், ரூ.17 லட்சத்து 39 ஆயிரத்து 460 மதிப்புள்ள 273.5 கிராம் தங்கத்தை காபி மேட் பவுடர் (coffee mate) மற்றும் பொம்மைகளில் மறைத்து, கடத்தி வரப்பட்டதை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், சட்ட விரோதமாக தங்கம், கரன்சி நோட்டுகள் மற்றும் உயிரினங்களான பறவைகள் மற்றும் பாம்புகள் போன்றவைகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (பிப்.10) துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணி ஒருவர், சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், விமான நிலையம் முழுவதும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

இச்சோதனையில், ஆண் பயணி ஒருவர் ரூ.17 லட்சத்து 39 ஆயிரத்து 460 மதிப்புள்ள 273.5 கிராம் தங்கத்தை, காபி மேட் பவுடர் (coffee mate) மற்றும் பொம்மைகளில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்தார், அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா அல்லது வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதா என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ஏஐ கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்!

Last Updated : Feb 11, 2024, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.