ETV Bharat / state

"நேற்று முதல்வர் காக்கி பேண்ட் போட காரணம் என்ன?”.. திமுக - பாஜக உறவு.. சீமான் கடும் சாடல்! - Seeman on Krishnagiri Issue - SEEMAN ON KRISHNAGIRI ISSUE

NTK Seeman on Hangman Protest: திமுகவும் பாஜகவும் எதிர்ப்பது போல் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள் என தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் கூறியுள்ளார்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 6:38 PM IST

சென்னை: சென்னை பின்னி லிங்க் சாலையில் உள்ள சென்னை மின்வாரிய தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற கேங்மேன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அப்போது ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய சீமான், “மின்சாரத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய அரசு, மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் காட்டவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால் அரைமணி நேரத்தில் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை சரி செய்யும். ஆனால், தமிழக அரசு மின்சார வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காது.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்தும், தமிழ்நாட்டில் போஸ்ட் மரத்தில் ஏறி ஊழியர்கள் வேலை செய்யும் அவல நிலையே இருக்கிறது. 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு ஒரு காலம் வரும். அப்போது மின்வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறிகையில், “தமிழ்நாட்டு மின்வாரிய ஊழியர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அதில், மின்வாரியத்தில் உள்ள 63 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதால், அதை கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும்.

ஊழியர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் போராடுகிற மக்களை பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவது அரசுக்கு புதிதல்ல. 100 ரூபாய் நாணயத்திற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காததுக்கு கேள்வி எழுப்பாதது ஏன்?

திமுகவுக்கும், பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை. வெளியில் எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். நேற்று பேண்ட் போட்டிருந்த முதலமைச்சர், காக்கி நிற பேண்ட் போட காரணம் என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தலித் மக்கள் முதல்வராகலாம்” எனக் கூறினார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, "நாம் தமிழர் நிர்வாகி மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது, காவல்துறை கைது செய்திருக்கிறது. தவறு யார் செய்திருந்தாலும் தவறுதான்.

100 ரூபாய் நாணயம் வெளியிட்டால் அதற்கு தமிழக அரசு பல்லிளிக்கிறது, அதுதான் பாசிச எதிர்ப்பு. நேற்று வெளியிட்ட கலைஞர் நூற்றாண்டு 100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு. அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் கூட ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்கச் சொல்லலாம்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஜுனியர் டாக்டர்கள் போராட்டம் எதிரொலியால் மேற்கு வங்கத்தில் மருத்துவ சேவை பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.