ETV Bharat / state

"விதைகளை பாதுகாக்காமல் வேளாண்மையை எப்படி காப்பாற்ற முடியும்?" - விவசாயிகள் ஆதங்கம்! - Seed festival 2024 - SEED FESTIVAL 2024

Seed festival 2024 In Madurai: அனைத்து பாரம்பரிய தாவரங்களின் விதைகளை பாதுகாக்காமல் நமது மரபு வழி வேளாண்மையை ஒருபோதும் காப்பாற்ற முடியாது. ஆகையால், இதற்கு அரசாங்கம், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியம் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை விதைத் திருவிழாவில் விவசாயி அன்னவயல் காளிமுத்து
மதுரை விதைத் திருவிழாவில் விவசாயி அன்னவயல் காளிமுத்து (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 2:22 PM IST

மதுரை: தென்மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பும், மதுரை காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விதைத் திருவிழா (Seed festival) 2024 நிகழ்வு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ரூசா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

விவசாயி அன்னவயல் காளிமுத்து, பேராசிரியர் வேலுச்சாமி கார்த்திகேயன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து விதைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் விவசாயி அன்னவயல் காளிமுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போதும், "விதையை விதைத்திடு.. விதையைக் காத்திடு.. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை, என்பதற்கேற்ப விதைக்கான ஒன்றுபட்ட முழக்கம் இந்த ஆடி மாதத்தில்தான் நிகழும். குறிப்பாக இந்த மாதத்தில்தான் கல்யாணம், காதுகுத்து, கிடாவெட்டு உள்ளிட்ட சடங்குகள் எவையும் இருக்காது.

காரணம், ஆண்டின் 365 நாட்களில் இந்தக் குறிப்பிட்ட 30 நாட்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மதுரையில் இந்த விதைத் திருவிழா 5ஆவது முறையாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விதைத் திருவிழாவின்போது, உள்ளூர் மக்களுக்கான விதைகளை உறுதி செய்திருந்தோம். அதன் அடிப்படையில் விதை வங்கி ஒன்றை உருவாக்கினோம். அதன் தொடர்ச்சியாக விதைகளைப் பாதுகாப்பதற்கான தொடர் முயற்சியில் ஏன் இறங்கக்கூடாது என்ற கேள்வியின் விளைவே இந்த கண்காட்சி.

தனித்தன்மை வாய்ந்த கத்திரிக்காய்: ஒவ்வொரு 20 கி.மீ.க்கு இடையிலுள்ள பகுதிகளில் வாழும் விவசாயப் பெருமக்கள் தங்கள் பகுதியில் கத்திரிக்காய் உள்ளிட்ட தாவரங்களின் விதைகளைப் பாரம்பரியமாகவே பாதுகாத்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் எட்டுநாழி, காரைக்கேணி உள்ளிட்ட கிராமங்களில் கிடைக்கும் கத்திரிக்காய்கள் தனித்துவம் ிக்கவை. இவ்விரண்டு கிராமங்களின் கத்திரிக்காய்களுமே 20 கி.மீ. வேறுபாட்டில் தனித்தனி தன்மைகளைக் கொண்டதாகத் திகழ்கின்றன.

ஒரு விதையும் மற்றொரு விதையும் கலந்து விடக்கூடாது என்பதில் நமது முன்னோர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது விதை வணிகம் என்பது மேலோங்கிவிட்டது என்பதால் எந்தவிதையையும் கொடுத்து விவசாயிகளிடம் விளைய வைத்துவிடலாம் என்ற தவறான போக்கு உருவாகியுள்ளது. விவசாயிகளை மேலும் அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் மீதான சுமையை ஏற்றுவதாகவும் உள்ளது.

அதனாலே எளிய மக்களைக் கொண்டு விதைச் சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த விதைத் திருவிழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 ஆயிரம் பேர் வரை வருகை தந்து பயன் அடைந்துள்ளனர். இந்த ஆடி மாதம் முழுவதும் நமது பாரம்பரிய விதைகள் குறித்து அனைவரும் பேச வேண்டும். அதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட வேண்டும்.

விதைகளுக்கு புவிசார் குறியீடு?: இதுபோன்ற விதைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இதனை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்துகிறோம். இதுபோன்ற விதை பாதுகாப்பு மூலமாக விவசாயிகள் பாதுகாக்கப்படுவதுடன் அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் உடல்நலமும் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை" என்று அன்னவயல் காளிமுத்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய மதுரை தியாகராசர் கல்லூரி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலுச்சாமி கார்த்திகேயன், "பாரம்பரிய நெல் ரகங்களில் 175 வகைகளைப் பாதுகாத்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து பரவலாக்கமும் செய்து வருகிறோம். மேலும், அதனை விதைத்து மாணவர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறோம். கடந்த 10 ஆண்டு முயற்சியின் விளைவாகப் புழக்கத்திலிருந்து மறைந்துபோன பல நெல் ரகங்களை மீட்டு எடுத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் தேடப்பட வேண்டிய ரகங்கள் நிறைய உள்ளன. அதற்கு இதுபோன்ற விதைத் திருவிழாக்களே பெருமளவு உதவியாக உள்ளன. இங்கு நடைபெறுகின்ற விதைப் பகிர்வின் மூலமாக நமது பாரம்பரிய ரகங்களைப் பாதுகாப்பதற்கான சூழல் உருவாகிறது. தொடர்ச்சியாக இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்கவும், ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது. அதனால் பாரம்பரிய விவசாய முறை மீண்டும் செழிப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “மாநகராட்சியிலே எங்க தெரு இல்லையாம்.. பாதுகாப்புக்காக இதை செய்றோம்” - மயூரா நகர் மக்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.