ETV Bharat / state

விஜயின் தவெக முதல் மாநில மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் துபாய் நிறுவனம் பற்றி தெரியுமா? - VIJAY

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெகவின் முதல் மாநில மாநாட்டில் துபாயை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் செக்யூரிட்டி நிறுவனம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தவெக மாநாட்டில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள்
தவெக மாநாட்டில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 2:34 PM IST

சென்னை: தவெக மாநாட்டில் சிவப்பு சீருடை அணிந்து தொப்பியுடன் காணப்படும் இளைஞர்கள் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக மாநாட்டின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த சாஜியை ஈடிவி பாரத் தமிழ்நாட்டுக்காக சந்தித்தோம். நம்மிடம் பேசிய சாஜி, "எங்களது ஜென்டர் பாதுகாப்பு நிறுவனம் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. என்னுடைய தலைமையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு அவசர கால சிகிச்சை, மாநாட்டுக்கு வருபவர்களுக்கு எப்படி உதவுவது, விஐபிக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது உள்ளிட்ட பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எங்களது நிறுவனம் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ஷாருக்கான், கமல்ஹாசன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனமாகும். சமீபத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், பள்ளி மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கிய நிகழ்ச்சிக்கும் எங்கள் நிறுவனம் தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது," என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.