ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்ட தேதி மாற்றம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! - சென்னை

Teachers Association Protest: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், பிப்.19 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 10:21 PM IST

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், பிப்.19 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311 இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியுள்ளதாவது, “1.6.2009-க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8 ஆயிரத்து 370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

ஒரே பணி ஒரே கல்வி தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் இருப்பதைக் களையக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற எங்கள் கோரிக்கையை இடம் பெற செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்ற போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 1.1.2023ல் புத்தாண்டின் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. 2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் பணி ஓய்வு பெற்று வருகின்றனர். பணி நியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம்.

ஊதிய முரண்பாட்டை விரைந்து களைய கோரி சென்ற ஆண்டில் மூன்று கட்ட போராட்டங்களை நடத்தினோம். முதல் கட்டமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்ற கோரிக்கை ஆயத்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 6 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக செப்- 5 முதல் 27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்றோம். மூன்றாம் கட்டமாக 2023 செப்டம்பர் 28 முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினோம். அக்டோபர் 6ல் நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் கண்டிப்பாக மூன்று மாதங்களுக்குள் 3 நபர் ஊதியக்குழு அறிக்கை பெற்று, சமவேலைக்கு சம ஊதிய கோரிக்கையை சரி செய்கிறோம் என்ற வார்த்தையும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இது வேண்டுமென்றே கால தாமதப்படுத்துவதாகவே எண்ண வேண்டியது உள்ளது. வாக்குறுதி கொடுத்து விட்டு அதனை நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்துவது அரசுக்கு அழகல்ல.

எனவே இன்று (பிப்.10) திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் பிப்ரவரி 12 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட போராட்டம், நிர்வாக காரணங்களால் 19ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என தேதி மட்டுமே மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் நகர் மன்ற கூட்டம்; மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.