ETV Bharat / state

மஞ்சளாறு கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! - manjalar dam Flood warning

Manjalar dam Flood warning: மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதால், தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை
மஞ்சளாறு அணை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 2:49 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பெருமாள் மலை, பாலமலை, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டியது. இந்நிலையில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 51 அடியில் 52.80 அடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று அணையின் முழு கொள்ளளவான 51 அடியில் 53 அடியை எட்டியது.

இதனையடுத்து, பொதுப்பணித்துறையினர் தேனி மாவட்டத்தின் மஞ்சளாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளான தும்மலபட்டி, ஊத்தங்கல் புதுப்பட்டி, வத்தலகுண்டு, விடுவிடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அணையில் நீர் இருப்பு 395.37 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதையும் படிங்க: தேனி மழை எதிரொலி: மஞ்சளாறு, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு! - Flood Alert In Theni

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.