பெரம்பலூர்: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று (ஜூலை 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
" முதலமைச்சருக்கு நன்றி சொன்னேனு சொல்லுங்க சார்"#CMBreakfastScheme #CMSTALIN #sssivasankar #peramablur #schoolstudents #etvbharattamilnadu @sivasankar1ss @CMOTamilnadu pic.twitter.com/7hRMaEtNDQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 15, 2024
அதன்பின், இத்திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது. அந்த வகையில், இந்த திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த திட்டத்தை மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது, அமைச்சரின் அருகில் அமர்ந்திருந்த சுவிதா என்ற 5ஆம் வகுப்பு மாணவி அமைச்சரிடம், “சார் எங்க அப்பா நான் சிறு வயது இருக்கும்போதே இறந்து விட்டார். அதனால் குடும்பம் வறுமையில் இருந்துச்சு. சரியாக சாப்பிட முடியாததால் என்னால் பள்ளிக்கு வர முடியவில்லை.
இப்போ இங்கே காலையில் சாப்பாடு தருகிறார்கள். சாப்பாடு நன்றாக உள்ளது. இனிமேல் தினமும் பள்ளிக்கு வருவேன். நன்றாக படிப்பேன். காலை உணவுத் திட்டத்தை கொடுத்த முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றியைச் சொல்லிடுங்கள் சார்” எனக் கூறியதும், முதலமைச்சர் கிட்ட கண்டிப்பாக நான் சொல்லிடுறன் என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்! - Chief Minister Breakfast Scheme