ETV Bharat / state

மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை ஒப்படைக்க திட்டம் - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Mahavishnu Spiritual speech issues

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 11:13 AM IST

Updated : Sep 9, 2024, 12:23 PM IST

Department of School Education: சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த மகாவிஷ்ணுவின் ஆன்மீக சொற்பொழிவு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நடத்தி வரும் விசாரணை நாளை நிறைவு பெற்று, அதன் பிறகு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை, மகாவிஷ்ணு - கோப்புப்படம்
பள்ளிக்கல்வித்துறை, மகாவிஷ்ணு - கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், செப்.7ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மூன்று நாட்களாக விரிவாக விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல்,
தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடமும் இது தொடர்பான விசாரணையை பள்ளி கல்வி இயக்குநர் நடத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: "கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும்"

இரண்டு அலுவலர்களுமே, தங்களிடம் தலைமை ஆசிரியர்கள் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோன்று, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், தாங்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடம் மாற்றம் செய்ததற்கு அங்குள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த பள்ளியில் இருந்து பணியிடம் மாற்றம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இன்றும் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து நாளை பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட முடிவுகள் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Sep 9, 2024, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.