ETV Bharat / state

ரயிலில் துணி உறையுடன் கம்பளி போர்வை - மதுரையில் முதன்முதலாக அறிமுகம்! - MADURAI

ரயிலில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக துணி உறையோடு கம்பளி போர்வையும் வழங்கும் திட்டம் தெற்கு ரயில்வே சார்பாக முதன் முதலாக மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தனித்தனி துணி உறைகளோடு பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளி போர்வைகள்
தனித்தனி துணி உறைகளோடு பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளி போர்வைகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 10:40 PM IST

மதுரை: ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கம்பளி போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப் படுகிறது.

கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது. இந்த உலர் சலவை சம்பந்தமாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வந்தனர். ஆகவே பயணிகளுக்கு தூய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரதட்சணை தடை சட்டம் தவறாக பயன்படுத்துவது அதிகரிப்பு...திருமண சிக்கல்கள் குறித்து கவனமாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இதன்படி கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளோடு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) முதல் சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த புதிய வசதி மதுரை - சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த துணி உறைகள் கம்பளி போர்வை உள்ளிடப்பட்டு வெல்கிரோ ஒட்டும் முறைப்படி ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது‌. இதன் மூலம் கம்பளி போர்வையை சுகாதாரமாக பாதுகாத்துத் தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் இந்த புதிய வசதியை வெகுவாக ஆதரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளனர் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.