ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: யூடியூபர் சவுக்கு சங்கர் கோஷம்.! - Savukku Shankar Criticize MK Stalin

கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமது பதவி.யை ராஜினாமா செய்ய வேண்டும் என நீதிமன்ற வளாகத்தில் வைத்து யூடியூபர் சவுக்கு சங்கர் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட சவுக்கு சங்கர்
நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட சவுக்கு சங்கர் (Image Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 11:06 PM IST

புதுக்கோட்டை: யூடியூபர் சவுக்கு சங்கர் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்திக் என்பவர் மீது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு சொந்தப் பிணை வழங்கி நீதிபதி விஜயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

பிணை கிடைத்த சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றபோது "கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளது, தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது" என்று கோஷமிட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவரான கார்த்தி என்பவர் ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் போது கார்த்தி யூடியூபர் சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரையும் இரண்டாவது குற்றவாளியாக அறந்தாங்கி போலீசார் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாரதி, சவுக்கு சங்கருக்கு சொந்த பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

பிணை கிடைத்த பிறகு போலீசார் அழைத்துச் சென்ற போது சவுக்கு சங்கர் தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களையும், அரசியல் எதிரிகளையும், பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காக தான் காவல்துறையை வைத்துள்ளது என குற்றம் சாட்டினார். மேலும், தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாததன் விளைவு தான் 33 உயிர்களை பலி வாங்கியுள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என்று முழக்கமிட்ட சவுக்கு சங்கரால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் ஒரே இடத்தில் தகனம்... கண்ணீரில் மூழ்கிய கள்ளக்குறிச்சி - Hooch tragedy death cremation

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.