ETV Bharat / state

ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்: போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் - Sankarankovil Van Driver Death - SANKARANKOVIL VAN DRIVER DEATH

Sankarankovil Van Driver Death issue: சங்கரன்கோவில் காவலர்கள் தாக்குதலால் உயிரிழந்ததாக கூறப்படும் வேன் ஓட்டுநரின் உடலை, சாதி மற்றும் அரசியல் ரீதியான தலையீடுகள் இல்லாமல் பெற்று கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Sankarankovil Van Driver Death Issue
ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 9:55 AM IST

மதுரை: சங்கரன்கோவில் காவல்துறையினர் தாக்குதலில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில், உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், நீதிமன்ற அறிவுறுத்துதலின் பேரில் இன்று (செவ்வாய்கிழமை) உடலை வாங்க சம்மதித்துள்ளனர். இந்நிலையில், உடலை பெறும்போது சாதிய ரீதியான அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எவ்வித தலையீடும் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மரணம் அடைந்த ஓட்டுநர் முருகனின் மனைவி மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் முருகன். இவர் கடந்த 8 ஆம் தேதி அச்சம்பட்டியில் உள்ள மக்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அச்சமயம், முப்பிடாதியம்மன் கோயில் அருகே வேன் வந்தபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ மீது வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர்கள், முருகனை தாக்கியதில் அவர் மயக்கமடைந்துள்ளார். அதையடுத்து, மயக்கமடந்த முருகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

காவல்துறையினர் அடித்ததால்தான் முருகன் இறந்ததாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து வடக்குப்புதூரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் மார்ச் 9ஆம் தேதி பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தினருக்கு காண்பிக்க மறுக்கின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

எங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை நடைபெற வேண்டும். மேலும், காவலர்கள் தாக்கி உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முருகன் மரணம் சம்பந்தமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இறந்தவரின் உடலை பெற்று, உறவினர்கள் இறுதி சடங்கு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நேற்று (திங்கட்கிழமை) உடலை பெற முடியவில்லை என்றும் கண்டிப்பாக இன்று காலை 9 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதி, உடலை பெற்றுக் கொள்ளும்போது சாதிய ரீதியான அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்த தலையிடும் இருக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராணுவ வீரர் கைது.. மதுரை பகீர் சம்பவம்! - Army Man Arrested

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.