ETV Bharat / state

சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்; அமலாக்கத்துறை முன் ஆஜாரன 5 மாவட்ட ஆட்சியர்கள்! - five district collectors appeared - FIVE DISTRICT COLLECTORS APPEARED

Five District Collectors: சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வழக்கு தொடர்பாக ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.

DISTRICT COLLECTORS
DISTRICT COLLECTORS
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 3:46 PM IST

சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள 34 இடங்களில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக மணல் அள்ளப்படுவதாகவும், அதன் மூலம் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டி அதனை பணப் பரிமாற்றம் செய்வதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த சட்ட விரோத மணல் குவாரிகளில் ஏஜென்டாக செயல்பட்டு வந்த மணல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, தொழிலதிபர் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களை அதிகாரிகள் முடக்கினர். மேலும், இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி இருந்தனர்.

இதில் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவாய் ஈட்டியதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் முத்தய்யா என்பவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி ஏற்கனவே இரண்டு முறை விசாரித்தனர்.

அப்போது, அவர் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக அளித்து இருந்தார். மேலும், அரசு நடத்தும் மணல் குவாரிகளில் பொறியாளராக உள்ளவர்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டது.

அதில் அரசு நிர்ணயித்த அளவைவிட எவ்வளவு மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டது, அதன் மூலம் எவ்வளவு வருவாய் கிடைத்தது, அதனை எப்படி மறைத்தார்கள் போன்ற விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த சட்டவிரோத மணல் அள்ளப்பட்ட குவாரிகள் அமைந்துள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். இதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்தார்களா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதற்கான ஆவணங்கள் என்னென்ன இருக்கிறது என்பதை குறித்து விசாரணை செய்வதற்காகத்தான் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆஜாரன 5 மாவட்ட ஆட்சியர்கள்: முன்னதாக, ஐந்து மாவட்ட ஆட்சியருக்கும் அமலாகத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியபோது, அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இடைக்கால தடை பெற்றனர். இதை எதிர்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற உத்தரவைப் பெற்றனர்.

இந்த நிலையில்தான், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அணி மேரிஸ் வர்மா, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகிய ஐந்து பேருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்ப நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் அரசு மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு எவ்வளவு? அதில் அவர்கள் சட்டவிரோதமாக அள்ளப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி, கைப்பற்றியுள்ள ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் கொண்டு வந்துள்ள ஆவணங்களை சரிபார்த்து அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது தொடர்பாக சில மாதங்கள் வழக்கு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: புதிய அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.