காஞ்சிபுரம்: திருபெரும்புதூரில், மிகப்பெரிய மின்னணு நிறுவனமான 'சாம்சங்'-இன் (Samsung) தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் செப்டம்பர் 9, 2024 முதல் போராட்டத்தில் (Workers Protest) ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம், வெறும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையாக மட்டும் இல்லாமல், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதும் பெரும் குரலாக ஒலிக்கிறது.
இந்த சூழலில், அரசு தரப்பின் பிரதிநிதிகள் பலதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், முக்கியமான, 'சாம்சங் தொழிற்சங்கம்' அங்கீகாரம் அமைக்கும் வரைப் பின்வாங்கமாட்டோம் என தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தருணத்தில் போராட்டம் கடந்து வந்த பாதை, மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்:
- வாழ்க்கைக்குத் தேவையான சம்பள உயர்வு: தற்போதைய சம்பளம், அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை என்பதே தொழிலாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு.
- ஓய்வு என்ற ஒன்று வேண்டுமே: நீண்ட வேலை நேரத்தால், தங்களின் உடல்நலமும், குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் 8 மணிநேர வேலையை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சலுகைகளை அதிகரிக்க வேண்டும்: மருத்துவச் சலுகைகள், ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
- தொழிற்சங்க அங்கீகாரம் வேண்டும்: தொழிலாளர்களின் குரலை ஒன்றுபட்டு எடுத்துச் சொல்ல, தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
போராட்டக் களம் அன்று முதல் இன்றுவரை...
செப்டம்பர் 9, 2024: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாம்சங் தொழிற்சாலை முன் கூடி, போராட்டத்தைத் தொடங்கினர்.
செப்டம்பர் 15, 2024: போராட்டத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களை நிறுவனம் மிரட்டுவதாகவும், வேலைக்குத் திரும்ப வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொழிலாளர்கள் எனினும் மனம் தளராமல் போராட்டத்தைத் தொடங்கினர்.
செப்டமப்ர் 16, 2024: தங்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலையிட கோரி பேரணியில் ஈடுபட முயன்ற சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். (மேலும் படிக்க)
செப்டம்பர் 23, 2024: சில தொழிலாளர்களுக்கு பரிசுகள் அறிவித்து, போராட்டத்திலிருந்து விலக சாம்சங் முயற்சிகள் மேற்கொண்டது. வேலைக்கு வராதவர்களுக்கு போனஸ் பிடித்தம், சம்பள பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் எச்சரித்தது. இதனையடுத்து சாம்சங் அளித்த சன்மானங்களைப் பெற்று சில ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனாலும், பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டக் களத்திலேயே உறுதியாக நின்றனர். (மேலும் படிக்க)
அக்டோபர் 2, 2024: தமிழ்நாடு அரசின் தலையீட்டால், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. நல்ல செய்தி வரும் எனத் தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
அக்டோபர் 5, 2024: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். (மேலும் படிக்க)
அக்டோபர் 7, 2024: அமைச்சர் தா.மோ.அன்பரசன், "சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. நாளை முடிவு தெரியும்" என்றார். இந்த சூழலில் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன், பேச்சுவார்த்தையின்போது எங்களது கருத்துகளை முழுமையாகக் கூறியுள்ளோம். முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். (மேலும் படிக்க)
அக்டோபர் 7, 2024: சாம்சங் நிர்வாகமும், தொழிலாளர் குழுவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால், தொழிலாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இதையும் படிங்க |
அக்டோபர் 8, 2024: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை சாம்சங் ஏற்றுக்கொண்டது. ஆனால், தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதன் தீர்ப்பின் அடிப்படையில் நிறுவனம் முடிவுகள் எடுக்கும் என்று தெரிவித்தார். (மேலும் படிக்க)
Samsung Management and workers have now reached an understanding with the new round of talks with more facilities and welfare promised. Samsung ‘Workmen’ have now been requested to come back to work and discuss further.
— Andrew SamRaja Pandian (@andrewsam) October 7, 2024
Update 10:19 PM: CITU says they’re not okay.. protest to… pic.twitter.com/S6BbBGBAow
அக்டோபர் 9, 2024: சாம்சங் வேலைக்கு சென்ற சாம்சங் ஊழியர்களின் அடையாள அட்டையை காவல்துறையினர் சோதனை செய்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
Police stopped the bus to do ID verification of Samsung workers, claiming they have the right to do this. How many directors, VPs have been stopped on road to get their IDs verified in the past just because they work for a certain firm? The police personnel claims " this… pic.twitter.com/Gw2bMShhzs
— Mathur Sathya J (@captmatsat) October 8, 2024
அக்டோபர் 9, 2024: சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 21ஆம் தேதி காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருகிறது. வன்மையான கண்டனங்கள். #Samsung #SamsungWorkers #SamsungStrike #WorkersRights #CITU @cmotamilnadu @kbcpim pic.twitter.com/YxOyuFxec1
— CPIM Tamilnadu (@tncpim) October 8, 2024
அக்டோபர் 9, 2024: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும், போராட்ட திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்தனர். இந்த விவகாரம் குறித்து சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாலாஜி, அருள் முருகன் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் இன்று பிற்பகல் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளனர். (மேலும் படிக்க)
அக்டோபர் 9, 2024: சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனை கருத்தில் கொண்டு சிஐடியு சங்கத்தில் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Tamil Nadu: Comrade A Soundarrajan, State President CITU, E Muthu Kumar, President of Samsung India Workers union (CITU) and hundreds of workers were forcefully removed from the protest site by the Tamil Nadu police.
— CPI (M) (@cpimspeak) October 9, 2024
The left parties have strongly condemned the undemocratic… pic.twitter.com/cSSp1y1inC
அக்டோபர் 9, 2024: சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது ஏற்புடையது அல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் சங்கங்களை அனுமதிப்பதில்லை, அதேபோல நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என சாம்சங் நிர்வாகம் அரசிடம் தெரிவித்ததாகவும், அதை போராடும் ஊழியர்களிடம் அரசு தரப்பிலிருந்து தெரிவித்ததாகவும், இதனால் உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் தொடர்வதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.