ETV Bharat / state

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கிய மேயர் பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் 47 ஆயிரத்து 647 ரூபாய் மதிப்புள்ள கையடக்கக் கணினிகளை மேயர் பிரியா வழங்கினார்.

மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார் மேயர் பிரியா
மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார் மேயர் பிரியா (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 9:07 PM IST

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சியின் 2024- 25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 4464.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் கல்வி, சுகாதாரம், மழை நீர் வடிகால் துறை, பூங்கா உள்ளிட்ட துறைகளின் கீழ் 82 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக "சென்னை மாமன்ற உறுப்பினர்கள் தங்களை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தங்களுடைய பணிகளுக்காக லேப்டாப் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை" வைத்திருந்தனர். இதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும் லேப்டாப்பிற்கு பதிலாக கையடக்க கணினி (Tab) வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் 15 மண்டலங்களை சேர்ந்த 200 மாமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்க கணினி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னை மாமன்ற கூட்டம்; அம்மா உணவகங்களுக்கு நிதி ஒதுக்கீடு, தனியார் டெண்டர் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இந்நிலையில் தகவல் தொழிற்நுட்ப செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும் சென்னை மாமன்றத்தில் காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்காகவும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் samsung S9fE கையடக்க கணினிகள் மற்றும் 4G wi-fi Hotspot (2year subscription cost) இன்று வழங்கப்பட்டது.

ரூ.47,646 மதிப்பில் என மொத்தம் 95.29 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு இன்று மேயர் பிரியா வழங்கினார். இதனை 200 மாமன்ற உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தகவல் நுட்ப செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் காகிதமில்லா நடைமுறையினை (Paperless Transaction) கொண்டு வருவதற்காகவும் இந்த கையெடுக்கக் கணினி உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.