ETV Bharat / state

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் களைகட்டிய சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா! - Samathuva Ganesh Chaturthi

Samathuva Ganesh Chaturthi: பொள்ளாச்சியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்லாமியர், இந்து என அனைவரும் ஒன்றாக கூடி விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி பிரசாதத்தை பரிமாறிக் கொண்டனர்.

பொள்ளாச்சி மாட்டுச்சந்தை சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
பொள்ளாச்சி மாட்டுச்சந்தை சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 8:41 PM IST

கோயம்புத்தூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாதி, மத பேதமின்றி இஸ்லாமியர்கள் விநாயகர் சிலை மற்றும் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி மாட்டுச்சந்தை சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில், மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

இதில், மாட்டு சந்தையில் உள்ள விநாயகர் சிலைக்கு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள், சீர்வரிசையாக விநாயகர் சிலை, ஆப்பிள், ஆரஞ்சு, மாலை, இனிப்பு வகைகளுடன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

அவர்களை மாட்டு வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் தென்றல் செல்வராஜ், திமுக கழக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அனைவரும் ஒன்றாக கூடி விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி பிரசாதத்தை பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தென்றல் செல்வராஜ் கூறுகையில், “சாதி, பேதமற்ற மத நல்லிணக்கத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். மாட்டுச் சந்தை பல்லாயிரக்கணக்கானர் கூடும் பகுதி. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதியில் இருந்து ஏராளமான வியாபரிகள் வந்து செல்கின்றனர்.

சாதி, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக மாட்டுச்சந்தையில் சமத்துவ விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இங்கு வந்து சீர்வரிசை வழங்கி வழிபாடு செய்துள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.