ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: மாங்கனி நகரமான சேலத்தைக் கைப்பற்றிய திமுக செல்வகணபதி! - LOK SABHA ELECTION RESULTS 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Salem Lok Sabha Election Result 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி அபார வெற்றி பெற்றார். மேலும், சேலத்தில் பதிவான வாக்குகளின் முழு விவரத்தைக் காணலாம்...

வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற  செல்வகணபதி
வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற செல்வகணபதி (credits - selvaganapathi X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 9:08 PM IST

Updated : Jun 4, 2024, 3:59 PM IST

சேலம்: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் 5,66,085 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷ் 4,95,728 வாக்குள் பெற்று தோல்வியை தழுவினார்.

வ.எண் வேட்பாளர் பெற்ற வாக்குகள்
1.திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி (வெற்றி)5,66,085
2.அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷ் 4,95,728
3.பாமக வேட்பாளர் என். அண்ணாதுரை1,27,139
4.நாதக வேட்பாளர் டாக்டர் மனோஜ்குமார்76,207
  • வாக்கு எண்ணிக்கையின் போது, சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 2,15,402 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 1,85,373 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 50,730 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் 30,174 வாக்குகளும் பெற்றனர். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 30,029 வாக்குகள் முன்னிலை வகித்தார். - 03.57 PM நிலவரம்.
  • சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 1,00,027 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 84,706 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 23,888 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் 13,368 வாக்குகளும் பெற்றனர். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 15,321 வாக்குகள் முன்னிலை வகித்தார். - 02.43 PM நிலவரம்.
  • சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 30,265 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 23,740 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 8,121 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் 3,957 வாக்குகளும் பெற்றனர். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 6,525 வாக்குகள் முன்னிலை வகித்தார்.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக புதிய முகம் விக்னேஷ், திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினர்.

திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி, அதிமுகவில் இருந்த காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் அரசியல் களத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் திமுகவிற்கு வந்த பிறகு, ஊழல் வழக்கில் சிக்கி தேர்தலில் பங்கேற்க முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வந்தார். இந்நிலையில், ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதையடுத்து தற்போது இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

2019 தேர்தலில் வென்றது யார்?: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 6,06,302 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எஸ்.சரவணன் 4,59,376 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் களமிறங்கிய பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.கே.செல்வம் 52,332 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றனர். 2019 தேர்தலில் 12,55,459 வாக்குகள் (80.5%) பதிவாகிய நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 12,96,481 (78.16%) வாக்குகள் பதிவாகின.

இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024, திமுக Vs அதிமுக - இருமுனைப் போட்டியில் சேலம் 'மாங்கனி' தொகுதியை கைப்பற்ற போவது யார்? - TN Lok Sabha Election Result 2024

Last Updated : Jun 4, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.