ETV Bharat / state

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு: 450 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு! - SALEM KOOLAMEDU JALLIKATTU 2025

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி 450 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க கோலாகலமாக நடந்து வருகிறது.

கூலமேடு ஜல்லிக்கட்டு
கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 1:36 PM IST

சேலம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில், சேலம் கூலமேடு பகுதியில் இன்று (ஜன.17) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு பகுதியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி அமர்க்களமாகத் துவங்கியது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 450 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

போட்டி நடைபெறும் பகுதியில் 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் என அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டில் அமைச்சர் பரிசு வழங்கும் காட்சி
சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டில் அமைச்சர் பரிசு வழங்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கினர். மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை
சேலம் கூலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கோலாகலமாக தொடங்கிய புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு!

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் மரு.பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.