ETV Bharat / state

பொறுப்பேற்ற உடனே அதிரடியில் இறங்கிய சேலம் ஆட்சியர்.. மலைவாழ் மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருள் வழங்க ஆணை!

Salem Collector Brindha Devi: மலைக் கிராமங்களில் நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் தங்கு தடையின்றி அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Salem Collector
சேலம் கலெக்டர் ஆய்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 3:50 PM IST

சேலம்: சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி இன்று(ஜன.30) திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,"அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாகப் பொதுமக்களுக்குச் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், சொர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் பெற வருகைதந்த பொதுமக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்துக் கேட்டறியப்பட்டது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,258 முழுநேர கடைகள், 457 பகுதி நேரம் கடைகள் என மொத்தம் 1,715 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், AAY அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள், காவலர் அட்டைகள், வனக் காவலர் அட்டைகள் உள்ளிட்ட 10,99,258 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்திலுள்ள 10,99,258 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 15,000 மெ.டன் அரிசியும், 1,345 மெ.டன் சர்க்கரையும், 290 மெ.டன் கோதுமையும், 1.20 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய், 870 மெ.டன் துவரம் பருப்பு, 930 மெ.டன் பாமாயில் மற்றும் 2,615 மெ.டன் AAY அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்குத் தேவையாக அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை அனுப்பிடத் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போன்று, மலைக்கிராமங்களிலும் செயல்படும் நியாயவிலைக்கடைகள் மற்றும் நகரும் நியாயவிலைக்கடைகள் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தரமாக வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் அந்தந்த நியாயவிலைக்கடைகளில் தகவல் பலகைகளில் இடம் பெற்றுள்ள உயர் அலுவலர்களின் தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அய்யந்திருமாளிகை அங்கன்வாடி மையத்திற்குச் சென்று குழந்தைகளின் வருகைப் பதிவேடு, கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

முன்னதாக, நேற்று(ஜன.29) சேலம் மாநகர் சீரங்கன் பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று(ஜன.30) மீண்டும் வேறு ஒரு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓசி சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரம் - கடை உரிமையாளரை பட்டா கத்தியால் மிரட்டிய இளைஞர்கள்! சிசிடிவி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.