ETV Bharat / state

"பெரியார் நன்கொடை கொடுத்த ஒரே பள்ளி இதுதான்" சாக்கோட்டை அன்பழகன் பெருமிதம்!

Sakkottai Anbalagan: அனைவரிடமும் நன்கொடை கேட்டு பெறும் பெரியார், இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.50 நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் எம்எல்ஏ
சாக்கோட்டை அன்பழகன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:35 AM IST

சாக்கோட்டை அன்பழகன்

தஞ்சாவூர்: கும்பகோணம் சாக்கோட்டையில் பகுத்தறிவு ஆரம்ப அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று (பிப்.28) திறந்துவைத்தார்.

கும்பகோணம் சாக்கோட்டை ஊராட்சியில், பகுத்தறிவு ஆரம்ப அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.

சாக்கோட்டை எம்.பி சண்முகம் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற பள்ளியின் திறப்பு விழாவிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இவ்விழாவில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பேசியதாவது, “ இப்பள்ளியை கடந்த 1944 ஆம் ஆண்டு துவக்கி வைத்தவர் தந்தை பெரியார். மாநிலங்களவை உறுப்பினர் சண்முகமும், நானும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள். வழக்கமாக அனைவரிடமும் நன்கொடை கேட்டு பெறும் பெரியார், இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.50 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, தங்கள் வீட்டிற்கு வருகை தந்த பெரியார், அங்கு மாலை சிற்றுண்டி அருந்தியுள்ளார். அங்கு, எனது மூத்த சகோதரருக்கு திராவிட அரசு என்று பெயர் சூட்டியுள்ளார்.இதனையடுத்து, எனது தந்தை குடியரசு இதழுக்காக ரூ.1 நன்கொடையாக வழங்கியுள்ளார்” என்று கூறினார்.

பின்னர், நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது, 1946 ஆம் ஆண்டு இப்பள்ளியில் நான் மாணவராக சேர்ந்து இங்கு தங்கி பயிற்சி பெற்றேன். எனது பள்ளி பயணம் இங்கு தான் தொடங்கியது” என்றார் முன்னதாக விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனின் பெற்றோர் கணபதி மற்றும் ஏகாம்பாள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: இமாச்சல பிரதேச அரசியலில் அடுத்தடுத்த திருப்பம்! ராஜினாமாவை வாபஸ் பெற்ற விக்ரமாதித்ய சிங்! என்ன நடக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.