சென்னை: பாரிமுனை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மண்ணடி பகுதியில் சோதனை மேற்கொண்டு ஹவாலா பணம் கொண்டு வருபவர்களை கைது செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பாரிமுனை அடுத்த வடக்கு கடற்கரை சாலை பகுதியில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணம் இன்றி 94 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.
அதன் பேரில் பணத்தை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் மண்ணடி பகுதியை சேர்ந்த முகமது என்பதும் இவருடைய முதலாளி பணத்தை ஒருவரிடம் கொடுக்க கொடுத்து அனுப்பியதாக கூறினார்.
அதன் பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என்று கூறப்படுகிறது இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 240 கொலைகள்! கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல் - RTI About Tirunelveli Murder Cases